அண்ணனின் இறுதிக் கிரியைகள் நடந்து கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தங்கை மரணம்! மேலும் 4 பேர் வைத்தியசாலையில், இலங்கையில் நடந்த சம்பவம்.. |

சகோதரனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சகோதரி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அண்மையில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார்.

மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாராகும் வேளையில் அவரது இளைய சகோதரி அகம்பொடி ரங்கி துலாஞ்சனி 31 வயதான சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர்களின் மரணத்தின் பின்னர், அசேல சுரங்கவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews