தாயும் மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்.. |

தாய் மற்றும் மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் பதுளை விதியபுர பிரதேசத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் இன்று (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் குறிப்பிட்டனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் சந்தேக நபர் 20,000 ரூபா பணம் கோரியதாகவும்,

அது கிடைக்காத காரணத்தினால் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளை செய்வதற்கு முன்னர் பெண்களை அச்சுறுத்தி சில தங்க ஆபரணங்களை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவ்வாறு பெறப்பட்ட தங்க ஆபரணங்களை சந்தேக நபர் அடகு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews