துன்னாலை வடக்கு நவிட்டான்பதி மனோன்மணி சக்தி சமேத காளிகாம்பாள் தேவஸ்தான நூதன புனர்ருத்தன சம்பரோஷண மஹா கும்பாபிஷேகம்…!

துன்னாலை வடக்கு நவிட்டான்பதி மனோன்மணி சக்தி சமேத காளிகாம்பாள் தேவஸ்தான நூதன புனர்ருத்தன சம்பரோஷண மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை(09) காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து காளியம்பிகை, விநாயகர், முருகன், வைரவர் போன்ற நூதன விக்கிரகங்கள் கிராமத்தை வலம் வந்தன. பின்னர்  மாலை கிரியைகள் நடைபெற்றன.  நேற்று  சனிக்கிழமை(10) காலை 8.00 மணியிலிருந்து எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு மாலை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றன.
 இன்று ஞாயிற்றுக்கிழமை(11) காலை 6.00 மணி முதல் கிரிகைகள் ஆரம்பமாகி பிரதமை திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய காலை 9 மணி 03 நிமிடம் முதல் 10 மணி 33 நிமிடம் வரையான சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம். இடம்பெற்றது.
 கும்பாபிஷேக கிரியைகளை பிரதிஷ்டாகுரு கிரிய கிரம ஜோதி சிவாச்சாரியார் திலகம் சிவஸ்ரீ. ராம் சபாநாதக் குருக்கள், கிரிய ஜோதி சிவஸ்ரீ. துஸ்யந்த குருக்கள் ஆகியோர் மேற்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews