விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இன்றைய தினம்  கிளிநொச்சிக்கான விஜயம்…..!

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இன்றைய தினம்  கிளிநொச்சிக்கான. விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
முதலாவதாக பூநகரிப்பிரதேசத்தில் உள்ள தெளிகரை குளம் மற்றும்  ஈநொச்சி குளத்தை புனரமைக்கும் வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.குறித்த இரண்டு குளங்களும் உலக வவங்கியின் 68.59 மில்லியன் ரூபா செலவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாச விவசாயத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது. மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாச விவசாயத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 33குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர் குறித்த பகுதி விவசாயிகளோடு கலந்துரையாடிருந்தார்.மேய்ச்சல் தரவை வனவளத்திணைக்களத்திடம் இருக்கிறது. மரம் ஒன்றுமே இல்லை அதனை  எங்களுடைய உற்பத்திக்கான இயந்திரங்களை பெற்றுத்தரவேண்டும், விவசாயத்திற்கு பசளையும் மண்ணண்ணெய்யும் தேவை  வயலுக்கும்,சோளத்திற்கும் ,மேட்டு நிலத்திற்கும் கட்டாயம் பசளை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.மண்ணண்ணெய் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேட்டு நில செய்கைக்கும் மண்ணண்ணெய் தேவை என்பது தற்போது தான் தெரியும் என தெரிவிக்கின்றார்.

மேலும் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஐம்போ நிலக்கடலை செய்கை பண்ணப்படும் விவசாய நிலத்தை பார்வையிட்டார்.
மற்றும்  இரணைமடு சந்தியிலுள்ள பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு குறித்த நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் உற்பத்திகளை பார்வையிட்டார்.பாரிய அளவு பூசணிக்காய், அதிக நீளமான புடலங்காய் என்பற்றை பார்வையிட்டு கைபிறிட் இனமா என கேட்கின்றார்.தொடர்ந்து குறித்த நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்தார்.நீண்ட நாட்களாக நியமனம் பெறாது இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.இந்த வருடம் சரிவராது 1000பேருக்கு மேல் இப்படி இருப்பதாகவும் அனைவருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews