சுருட்டு புகைப்பதற்க்காக  மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்……!

no smoking
சுருட்டை புகைப்பதற்க்காக தீமூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்து சாவடைந்த  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
சுருட்டு  புகைக்கும் பழக்கமுடைய மூதாட்டி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04/09/2022   தீக்குச்சியை எடுத்து சுருட்டை பற்றவைக்க தீமூட்டிவிட்டு அதனை அணைக்காது எறிந்துள்ள நிலையில் அவரது ஆடைகளில் தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த உறவுகள் உடனடியாக  பருத்தித்துறை ஆதார வைத்திய. சாலையில் ஆனுமதித்தனர். இந் நிலையில் மூதாட்டி நேற்று பிற்பகல் மரணமடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை திரைவளவை  சேர்ந்த பவளம் கிருஷ்ணசாமி என்கின்ற 83 வயதுடைய மூதாட்டியை இவ்வாறு மரணமடைந்துள்ளார். மரணமடைந்த குறித்த  மூதாட்டி தொடர்பான விசாரணைகளை சதானந்தம் சிவராசா மேற்கொண்டு வருகின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews