காலிமுகத்திடலை விட மிக மோசமாக மாறியுள்ள ஆரியகுளம் : தர்சானந் விசனம்

யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு  வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரிகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன் சென்று பொழுத்தினை கழிக்க அனுமதிக்கின்றார்கள். இது ஒரு கலாசார சீர்கேட்டிற்கு ஆரம்பமாகும்.

இதே போன்று பண்ணை கடற்கரையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

மகிழ்வீட்டுத் திடல் என்று சொல்லக்கூடிய அவ்விடத்திற்கு குடும்பத்துடன் சென்று பொழுதினை கழிக்க வேண்டுமே தவிர இவ்வாறான அநாகரிகமான செயல்களை யாழ். நகர மத்தியில் நடத்துவது என்பது தவறானதாகும்.

எதிர்காலத்தில் எங்கள் சமுதாயத்தினருக்கு இவ்வாறான விடயங்கள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இது தொடர்பாக இனி வருகின்ற கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin