தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவிப்பு!

தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறைகளுடன், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பான சட்டத் தளர்வு தொடர்பிலும் வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158வது பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகளுடன் புதிய வர்த்தமானி அறிவிப்பு (2287/28) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த தலைக்கவசங்கள், இலங்கை தரநிலை விவரக்குறிப்பின் வகை B பாதுகாப்பு தலைக்கவசங்கள் அல்லது அவ்வப்போது பாதுகாப்பு தலைக்கவசங்களுக்கு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் தரநிலைகளாக வகைப்படுத்தப்பட வேண்டும்.அத்தகைய பாதுகாப்பு தலைக்கவசம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட SLS தயாரிப்பு சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும்.
அந்த ஹெல்மெட்கள் அவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக்கக் கூடாது.பாதுகாப்பு தலைக்கவசங்களில் அதிர்ச்சியை உறிஞ்சும் லைனர், சின் ஸ்ட்ரொப், பஃபர் பேடிங் மற்றும் ஹெட் பேண்ட் ஆகியவை இருக்க வேண்டும்.
குற்றத்தடுப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி அல்லது சிறிலங்கா இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews