தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடிஉணவகம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை!

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றில் 35 ரூபாய் விற்பனை விலையாக பொறிக்கப்பட்ட தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் , அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்பனை செய்தமையை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை தண்ணீர் போத்தலை சான்று பொருட்களாக கைப்பற்றியுள்ளனர். அவற்றை நீதிமன்றில் பாரப்படுத்தி குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews