மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த வயோதிப பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று.!

யாழ்.கொடிகாமம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த வயோதிப பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார்.

இந்நிலையில் இறப்பின் பின்னர்நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய உடலம் தகனம் செய்யப்படவுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கொடிகாமம் – மீசாலை வடக்கை சேர்ந்த பூபால சிங்கம் தனலட்சுமி (வயது65) என தொியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews