பருத்தித்துறையில்  இரு மதுபான சாலைகளுக்கு சீல் –

 பருத்தித்துறை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை கிராமக் கோட்டு சந்தியிலுள்ள மதுபான விற்பவனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான்  மதுபான விற்பனை நிலையம்  என்பன இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் பதின் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது .
கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுசார விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றியோருக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மதுபான விற்பனை நிலையத்தின் மேலுமொரு பணியாளருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிராமக்கோட்டுப் பகுதி மதுசார விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதுடன் அங்கு பணியாற்றியவர்களது உறவினர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த மதுபான விற்பனை நிலையமும் 14 நாட்கள் மூடப்பட்டதுடன் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews