மணல்காடு சவுக்கம் காட்டை வனவள திணைக்களம் கைப்பற்ற முயற்சி, மக்களால் முற

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு  கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக விசேட அதிரடி படையினரும் குறித்த மணல்காடு சவுக்க மர காட்டுப் பகுதிக்கு வருகைதந்தவேளையிலேயே மக்களால் குறித்த காடு தம்மால் நாட்டி  வளர்க்கப்பட்டது, என்றும் இதனை வனவளத் திணைக்களத்திற்க்கு தர முடியாது என்றும் மக்களால் எதிர்ப்பு வெளியிட்டபோது தற்காலிகமாக வனவளம் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திலிருந்து சென்றுள்ளனர். குறித்த சவுக்கம் காடு 1963 ம் ஆண்டு பின்னர் 1980 மற்றும் 1993 காலப்பகுதியில் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம், மற்றும் மக்கள் அமைப்புக்காளால் நாட்டி வளர்க்கப்பட்துடன் குறித்த சவுக்கம் காட்டுப்பகுதியில் பொழுது போக்கு மையம் 2016 ஆண்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ஏழு ஏக்கர் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சவுக்கம் காட்டுப் பூங்கா தற்போது மணல்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பராமரிப்பில் உள்ளதுடன் 2014 ஆண்டு மாவட்ட செயலர் திரு வேதநாயகனால் அனைத்து பிரதேச செயலகங்கள் முன்னிலையில் சமூக காடாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிட தக்கது. எனினும் மக்களுக்கும் வனவள திணைக்கள அதிகாரிகளுக்கும் இவ்வளவு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்  கண்டு கொள்ளாமல் சம்பவ இடத்திற்கு வருகைதராமல் இருந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews