மகளிருக்கான தனியான வரிசை, அமைதியான முறையில் இடம் பெற்று எரிபொருள்  வினியோகம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மகளிருக்கான  தனியான வரிசை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றை தினம் பிற்பகல் 2:30 மணியளவிலிருந்து அமைதியான முறையில் எரிபொருள் வழங்கும்  நடவடிக்கைகள் இடம்பெற்றன.
நேற்றையதினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டும் சுமார் 1000 க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் கையிருப்பு முடிவுற்ற நிலையில் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியிலிருந்து பெற்றோல் விநியோகம் கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் கலாநிதி ஐ.யோகராசாவின் நேரடி கண்காணிப்பில் மகளிருக்கான தனியான வரிசை ஒழுங்கு படுத்தப்பட்டு பெற்றோல் விநியோகம் கியூ ஆர் அடிப்படையில் இடம் பெற்றது.
இதில் இராணுவம், பொலிஸார் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு படுத்தலின்கீழ் மிகவும் அமைதியான முறையில்  பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றது.
இதில் சுமார் 1400 வரையான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நூற்றுற்க்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகள் கார்கள் என்பனவற்றிற்க்கு பெற்றோல் நிரப்பப் பட்டன
நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் கலாநிதி யோகராஜா அவர்களால் இன்றைய தினம் மகளிருக்கான தனியான வரிசை ஒழுங்குபடுத்தப்பட்டமை மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews