கிளிநொச்சி குளத்தினை சுற்றுலா மையமாக மாற்ற முயற்சி….!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில் இடம்பெற்றது. அண்மையில் குறித்த திட்ட வரைபு தொடர்பில் இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரனால் வழங்கப்பட்ட நிலையில் சமூக மட்டத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
குறித்த அபிவிருத்தி தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும்  அனுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத லங்கா ஜெயரட்ணவின் இணைப்பு செயலாளர் சுமுது, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர் தவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது, குறித்த குளத்தினை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்து மக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றுவதற்கும், மாவட்டத்திற்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் திட்டத்தை நடைமறைப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews