கிளி தொற்றுநோய் சிகிச்சை நிலையத்திற்கு 8 பெறுமதியான உதவி…!

கிளிநொச்சி கொவிட் தொற்று நோயியல் சிகிச்சை நிலையங்களிற்கு 8 லட்சத்து 50ஆயிரம் பெறுமதியான உழநல பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
 சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன் சாந்திகம் நிறுவனத்தினால் குறித்த பொருட்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தின் பிரதிசிதிகளால் வழங்கி வைக்கப்பட்ட குறித்த பொருட்களை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் உள்ளிட்டோரிடம் வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வு இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கொவிட் தொற்று சிகிச்சை நிலையங்களிற்கு தேவையான பொருட்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது,
இவை, கிருஸ்ணபுரம், பாரதிபுரம், முறிகண்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கொவிட் தொற்று சிகிச்சை நிலையங்களில் உள்ள நோயாளர்களின் உளநல விருத்திக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews