புகைப்பட பிடிப்பாளர்களுக்கு அடையாள அட்டை….!

யாழ் மாவட்ட புகைப்பட பிடிப்பாளர் கூட்டுறவு  சங்க வடமராட்சி வலய அங்கத்தவர்களிற்க்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் திரு. திருச்செல்வம் தலைமையில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்றது.

இதில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை தொடர்ந்து தலமையுரையினை  தலைவர் திருச்செல்வம் வழங்கியதுடன் சென்ற கூட்ட அறிக்கை செயலாளர் திரு வசீகரனால் வாசிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செந்துரன் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து வடமராட்சி வலய புகைப்பட பிடிப்பாளர் கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் 69 பேருக்கு வழங்கப்பட்டது.
இதே வேளை இன்றைய தினம் காலை சாவகச்சேரி வலயம்,  வலிகாமம் வலயம், வடமராட்சி வலயம் உள்ளடங்கலாகா 190 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews