சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றிய தொண்டருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கத்தில்.. |

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் சந்திநிதி முருகன் ஆலயத்தைச் சேர்ந்தோரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் சந்திநிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் 51 வயதுடைய ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews