செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமானது.. |

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேற்று இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸ், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் எவரும் செல்லதடை விதிக்கப்பட்ட நிலையில்  பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட 100 பேருடன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews