யாழை அச்சுறுத்தும் கொரோணா மரணம், நேற்றும் 4 மரணம்…!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் உயிரிழந்த இருவருடைய பீ.சி.ஆர் அறிக்கைக்காக காத்திருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.பருத்தித்துறையில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சந்தேகத்திற்குரிய மரணங்கள் தொடர்பில் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது.

கரவெட்டியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக

பருத்தித்துறை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் உயிரிழந்தார். அதேபோல் பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர்

இரண்டு நாள்களாக வயிட்டோட்டம் காரணமாக சுகயீனப்பட்டிருந்த அவர் நேற்று வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார். வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்

உயிரிழந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது அயலில் கோரோனா தொற்றாளர்கள் உள்ள நிலையில் சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மந்திகை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை சந்தை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் உயிரிந்துள்ளார். அவரது அயலில் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாதிரிகள் பெறப்பட்டு

பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன், பருத்தித்துறை பேருந்து நடத்துனரான 58 வயதுடைய ஆண் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்

பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews