பருத்தித்துறை சிவன் கோவிலில் பூசை நடாத்த அனுமதிக்க கோரி உண்ணாவிரதம்….!(வீடியோ)

பருத்தித்துறை சிவன் கோவிலில் நித்திய பூசை நடாத்த அனுமதிக்க கோரி முதியவர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை சிவன் கோயில் எதிர்வரும் 21ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு  ஆலய நிர்வாகத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆலயத்திற்க்கு எந்தவொரு பூசையும் நடாத்தக் கூடாது  என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  ஆலய பிரதம குருவும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்
நூறுபேருடன் பூசை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்துடன் உள் வீதியில்  சுவாமி வலம் வரவும் சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்டாகவும், எனினும் இருபத்து ஐந்துக்கு உட்பட்டவர்களே ஆலயத்தில் இருந்ததாகவும் அவர்களுகயகு  வழங்கப்பட்ட அனுமதியை மீறி சுவாமி வெளி வீதி வலம் வந்தமையாலேயே  குறித்த தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பபட்டுள்ளது.
இதனால் ஆலய திருவிழாவிற்க்கு கொடியேற்றப்பட்டு ஆறாம் திருவிழா இன்று மதியம் நிறயவுற்றதின் பின்னரே குறித்த தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் மீதி நான்கு திருவிழாவும் நிறுத்தப்பட்டதுனன் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படாத. நிலையில் இத் தடை இடம் பெற்றிருக்கிறது.
இதனால் ஆலய பக்தர்கள் ஆகம விதிப்படி ஏற்றிய கொடியை இறக்கவும் அர்ச்சகர் மட்டும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியே குறித்த வயோதிபர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.ஆனால் இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை

Recommended For You

About the Author: Editor Elukainews