பளை முல்லையடியில் விபத்து, மூவர் படுகாயம்…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் சற்றுமுன்னர்  ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் படுகாயம்மடைந்துள்ளனர்.
 கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9வீதியூடாக கிளிநொச்சி நோக்கி ஈருருளியில் பயணித்து கொண்டிருந்த இரு பெண்கள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இரு பெண்களும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக 1990நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான தாய் ,மகள் இருவரையும் மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதியவருக்கும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் பளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு  பின் மேலதிக சிகிச்சைகளுக்காக பெண் ஒருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு அனுப்பப் பட்டுள்ளார்.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews