யாழ்.சந்நிதியான் ஆச்சிரமம் முடக்கப்பட்டது.. |

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்நிதியான் ஆசிரமம் முடக்கப்பட்டிருக்கின்றது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு

நேற்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயம் வருடாந்திர பெருந்திருவிழா நாளை ஆரம்பமாகவிருக்கிறது.

சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்குப் பின் சந்திநியான் ஆச்சிரமத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்போது கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து அன்னதானம் வழங்கியதால் பொதுச் சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டது.

இதேவேளை ஆலய சூழலில் அமைந்துள்ள கடைகளில் உள்ளோர் பிசிஆர் பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews