நாட்டில் டெல்ரா தொற்றாளர்கள் 117 ஆக அதிகரிப்பு…!

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 58 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.கொழும்பு, அங்கொட, கடுவெல, நுகேகொட, கல்கிசை, பொரலஸ்கமுவ, மஹரகம, பிலியந்தல,

கஹதுடுவ, கெஸ்பேவா, பண்டாரகம, பாணந்துறை, கியூதார, பியாகம, கடவத்த மற்றும் ராகம ஆகிய இடங்களில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், காலி, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், அம்பாறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்

டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews