யாழில் 3 மாத குழந்தை உட்பட 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 97 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் 09 மாத ஆண்குழந்தை ஒன்று உட்பட யாழ்.மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 31 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 மாத குழந்தை உள்ளிட்ட

3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர்,கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர்,

மயிலிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews