இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவமனையை நாடவும்.சுகாதார அமைச்சு….!

இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்திய ஆலோசயைனை உடன் பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வழமையாகவே அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு மிக வேகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால், 2 நாட்களுக்கு அதிக காலம் காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews