கொழும்பில் மீண்டும் வெடித்த போராட்டதால் பதற்றநிலை! –

கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ள  நிலையில்,  பொலிஸார் போராட்டகாரர்கள்  மீது   கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிஒல் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இதன்போது மக்கள் கூறுகையில், எமக்கு ரணிலும் வேண்டாம், சஜித்தும் வேண்டாம்.  மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள்.

25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews