விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம் அறிமுகம்!

விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள, புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள் தொகையினை விவசாயிகளுக்கு வழங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எச்.ருவான்சந்திர தீர்மானித்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விவசாய பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் இயந்திரம் மற்றும் வாகனங்கள் தொடர்பாக முறையான உரிய திட்டத்தின் படி, எரிபொருள் வழங்குவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைப்புகளுக்கும், பிரதேச செயலாளர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய விவசாயிகள் தமக்கு தேவையான எரிபொருளினை பெற்றுக் கொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews