கிளிநொச்சி பசுமைப்பூங்காவிலும் நினைவேந்தல்…..!

கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நேற்று(18-05-2022) மாலை  சுடரேற்றி   மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில்   பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  நேற்று பல்வேறு இடங்களிலும்    உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றன.
 
பசுமை பூங்காவில் இடம் பெற்ற நினைவேந்தல்  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிம்மயா மிசன் சுவாமிகள் மற்றும் பங்குத்தந்தை மகாதேவா சைவ சிறுவர்கள் குழந்தைகள், உயிரிழந்தவர்களின் உறவுகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  வழங்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews