காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் அனுஷ்டிப்பு.

13  ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்கள் துன்பங்களின் நினைவுகள் என்றும் மறக்கமுடியாத அளவிற்கு உறவுகளைப் பறிகொடுத்த நாளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட துயரங்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவுப் பொதுச்சந்தை முன்றலில் காரைதீவு பிரதேசசபைத் தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றி பூக்கள் சொறிந்து உயிர் நீத்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி நிகழ்வுடன் பொது மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது..

காரைதீவு பிரதான வீதியில் பயனித்த மக்கள் அவ்விடத்தில் தரித்து நின்று கஞ்சியினை அருந்தி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

கல்முனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் காரைதீவுப் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கான முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கினார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews