மட்டு.தரிசனம் விழிப்புலணற்றோர் பாடசாலையின் ஆண்டு நிறைவு விழா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி நொச்சிமுனை பகுதியில் 1992 ஆம் ஆண்டு விழிப்புணர்வற்ற பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் 30 வது ஆண்டு விழாவாக முத்து விழா நேற்று  கொண்டாடப்பட்டது

தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் நிர்வாக குழு தலைவர் எ .ரவீந்திரன் தலைமையில் பாடசாலை மாணவர்கள் , நிர்வாக குழு உறுப்பினர்கள் இணைந்து பாடசாலையின் 30 வது ஆண்டு விழா நிகழ்வாக கேக் வெட்டி கொண்டாடினர்.

தரிசனம் பாடசாலை மாணவர்களின் கல்விக்காக பாரிய பங்காற்றிய அமரத்துவம் அடைந்த மாஸ்டர் சிவலிங்கம்ஐயாவின் ஞாபகார்த்தமாக சிவலிங்கம் ஐயாவின் குடும்பத்தாரினால் வழங்கப்பட்ட பயன்தரும் பழமரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நாட்டப்பட்டது .

இந்நிகழ்வில் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலை ஸ்தாபகரும் , நிர்வாக குழு உப தலைவருமான என் .இதயராஜ் , நிர்வாக குழு செயலாளர் எம்.ஜதீஸ் , பொருளாளர் டி . சுபாஷினி , நிர்வாக உத்தியோகத்தர் தனலோஜினி ஜெயரூபராஜ் , நிர்வாக குழு உறுப்பினர்களான திலகவதி ஹரிதாஸ் , யோ . ருத்ரா மற்றும் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews