யாழ்.கொடிகாமம் – மிருசுவில் விபத்தில் சிக்கிய தந்தையும் இரு பிள்ளைகளும்..! ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்… |

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்கள் கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த தயாபரன் மற்றும் அவருடைய பிள்ளைகள் என கூறப்படுகின்றது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பான புகைரத கடவை அமைக்கும்படி கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மக்கள்,

புகைரத பாதையை மறித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews