திருமலை உயர் தொழில்நுட்பவியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்திருந்தனர்

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் இந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் முன்வர வேண்டும் என இதன்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews