எரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்கு மாத்திரமே சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இதற்கமைய, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 2675 ரூபா எனவும், அதிக விலைக்கு எரிவாயுவை விநியோகிக்கப்படுமாயின், குறித்த விநியோகஸ்தர்கள் தொடர்பில் பொலிஸார், நுகர்வோர் அதிகார சபை அல்லது லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவிக்குமாறு நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் 1311 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கும் முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews