திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் அடிக்கல் நாட்டல்.

கிழக்கிலங்கை வரலாற்று பழைமையும் பெருமையும் பெற்று விளங்கும் அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்திற்கான திருச் சுற்று மண்டப கோட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஆலயத்தில் இடம்பெற்று இருந்தன.

ஆலய குரு சிவஸ்ரீ நீதிநாதர் அங்குசநாதக் குருக்களினால் மூலமூர்த்தியான முருகப் பெருமானுக்கு பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து புனித கல்லானது ஆலயத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு பூமி பூஜைகள் என்பன இடம்பெற்றன.

ஆலய தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் இன்று ஆலய வடக்கு திசையில் சுபவேளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய குருவினால் முதலில் கல் நடப்பட்டதைத் தொடர்ந்து ஆலய வண்ணக்கர் நிருவாகிகள் மற்றும் அதிதிகளால் திருச் சுற்று மண்டப கோட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் சபை உறுப்பினர் எஸ்.சசிகுமார் ஆலய மற்றும் ஆச்சாரியார் ஸ்தபதி எம்.குமார் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்ற தலைவர் ஏ.கணேசமூர்த்தி வட்டாரப் பிரதி நிதிகள் ஆலய நிருவாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews