கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கல்..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் தேவ மகிமை உதவிடும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தில் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வமுடன் செயற்படும் தெரிவு செய்யப்பட்ட 20 பெண்களுக்கு வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் டெலினா றொசாயிறோ, கள உதவியாளர் ஏ.ல்.நஸ்ரின், சிறிகாந் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin