முல்லைத்தீவு தேறாங்கண்டல் மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி……!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலாளர்  நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட  தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு  225000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்களும், 75000 ரூபா நிதியும் நேற்று  வழங்கப்பட்டுள்ளன.
தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள ஶ்ரீ அதிசய முருகன் ஆலயத்தில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் இயக்குநர்  மோகனதாஸ் சுவாமிகள்  நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
அவர்களுடன் துணுக்காய்  பிரதேச சபை உப தவிசாளர்-த.சிவகுமாரன், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin