உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதித்தால்: ஐரோப்பா மற்றும் உலகிற்கு பேரழிவு!

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது மேற்கத்தையத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பது போர்ப் பிரகடனத்தைப் போன்றது. ஆனால் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அது வரவில்லை என்று புடின் கூறினார்.
உக்ரைனில் நாங்கள் அங்கு தங்கியிருக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் மீதான சிறப்பு இராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி நடக்கிறது. அதில் எனக்கு எந்த சந்தேகங்களும் இல்லை.
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க வேறு எந்த நாடாவது தடை விதித்தால், அது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படும். இது ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் மகத்தான மற்றும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் மேற்கத்தை சக்திகளை எச்சரித்தார்.
ரஷ்யாவில் ஒருவித இராணுவச் சட்டம் அல்லது அவசர நிலை பிரகடனப்படுத்தப்படலாம் என்ற வதந்திகளையும் புடின் நிராகரித்தார். ரஷ்யாவிற்கு பிற நாடுகளால் தற்போது அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாததால் நாட்டில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இராணுவச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என புதின் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin