மருத்துவர் சுதர்மனின் “அன்பே சிவம்” (திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்) நூல் சைவ மகா சபை வெளியீடாக மகா சிவராத்திரி அன்று வெளியீடு…….!

தமிழ்ச் சைவப் பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர் சுதர்மனின் “அன்பே சிவம்” (திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்) நூல் சைவ மகா சபை வெளியீடாக  மகா சிவராத்திரி அன்று வெளியிடப்பட்டது.
 அகில இலங்கை சைவ மகா சபையின் வன்னிப் பிராந்திய தலைமையகமான மாங்குளம் சிவஞான சித்தர் பீடத்தில்  தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் மேனாள் நீதிபதி வசந்தசேனன் வெளியீட்டு வைக்க மலையக குரு முதல்வர் தவத்திரு திருஞான சோதி அடிகளார் பெற்று கொண்டார்.
அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச்செயலாளர் பரா நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்ச் சைவப் பேரவையின்  தலைவர் சிவத்திரு இ. வசந்தசேனன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெளியீட்டு உரையையும் நிகழ்த்தினார்.
கௌரவ விருந்தினராக ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி திரு த. யோகானந்ராசா கலந்துகொண்டு உரை ஆற்றினார்.
சைவ மகா சபையின் வன்னிப் பிராந்திய தலைவர் சிவத்திரு.சுரேந்தர்,  சைவ அறப்பணி நிதிய பொறுப்பாளர் அருள். சிவானந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்
அறநெறி மாணவர்களின் திருமந்திர ஒதுகை அறநெறி கீதம் இசைத்தல் என்பனவும் இடம் பெற்றது.
ஈற்றில் சைவ மகா சபை பத்திராதிபர் திரு.ந.பொன்ராசா நன்றியுரை வழங்கினார்.
சைவ மகா சபை தமிழ்ச் சைவப் பேரவை உறுப்பினர்கள், வன்னி சிவப்பிராந்திய அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஒரு தொகுதி நூல்கள் அமரர் நாகேசுவரி கதிர்காமநாதன் (மன்னார்) மற்றும் அமரர் தம்பையா பாலசிங்கம் (காரைநகர்) ஞாபகர்த்தமாக அறக்கொடையாக அச்சிடப்பட்டு வன்னி, மலையக, கிழக்கு சிவப்பிரார்திய சைவச் சிறார்களிற்கு, ஆசிரியர்களுக்கு விநியோகிக்க இணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin