காஸ் வெடிப்பு சம்பவங்களுக்கு பயந்து மண்ணெண்ணை அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணையும் இல்லையாம் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் கவலை…..!

காஸ் வெடிப்பு சம்பவங்களுக்கு பயந்து  மண்ணெண்ணை அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணையும் இல்லையாம் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
02.03.2022 இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 1.00 மணிதொடக்கம் மாலை 6.00  மணிவரை நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் கொள்கலனுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதன் காரணமாக பலரும் ஆத்திரத்தில் திட்டித்திர்த்துள்ளனர். இருப்பினும் பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட்ட அதேவேளை டீசல் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பலர் ஏமாற்றத்துடன் வீடு  திரும்பினர். இன்றைய தினம் பெருமளவான மக்கள் எரிபொருள் கொள்வனவுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியமையை எம்மால் அவதானிக்கமுடிந்தது.

Recommended For You

About the Author: admin