உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் அருகே ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் 1,263 அடி உயரம் கொண்டதுடன், உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews