வடமராட்சி கிழக்கு – பொற்பத்தியில் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு – பொற்பத்தி பகுதியில் இரு வீடுகளுக்குள் புகுந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபோதை கும்பல் ஒன்று வீதியில் வெற்று கண்ணாடி போத்தல்களை உடைத்து துண்டங்களாக போடுவதை தட்டிக்கேட்டதன் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் கண்ணாடி போத்தல்களை உடைக்கவேண்டாம் என்று சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களால் தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று,  நேற்று முன்தினம்  இரவு 8:15 மணியளவில் வாள்களுடன் குறித்த வீடுகளுக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கியதுடன், வீட்டு சீற், வேலி என்பனவும் அடித்து நொருக்கி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது.

வீதியில் கண்ணாடி உடைக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 25/02/ 2022 அன்று ஏற்பட்ட முரண்பாட்டில் நான்கு பேர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மூவர் நீதிமன்றம் ஊடக சட்டநடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நால்வர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்  இரவு வீடுகள் உடைப்பு சம்பவங்களுடன் தொடர்பு பட்ட நபர்கள் சுதந்திரமாக நடமாடி வருவதாகவும் இதனால் குறித்த பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews