கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் பெரிய தீ விபத்து, பலத்த சேதம்,……!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டு குறித்த தீ விபத்து கரைச்சி பிரதேச சபையில் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின்  உதவியுடன் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்ந்து இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த தீ விபத்து சம்பவத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகளின் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews