பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயங்குவதாக குற்றச்சாட்டு.. |

பாடசாலை சென்று திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டபோதும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என மாணவனின் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்விகற்கும் உயர்தர மாணவன் கௌரிதாசன் கரிஸ் (17 வயது) நேற்று முன்தினம் (18)

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீதியில் வைத்து குறித்த மாணவன் மீது இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமான தாக்கியதில் காயமடைந்த மாணவன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. என மாணவனின் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews