கிளிநொச்சி நொச்சி முனையில் கடலாமையுடன் ஒருவர் கைது….!

கிளிநொச்சி முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந்தேக நபரையும் கடலாமையும் வனவளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சந்தேக நபரை வனவளத் திணைக்களத்தினர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முறைப்படுத்தப்பட்டது.
 குறித்த சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்த  நீதவான் எதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
குறித்த ஆமையை மிருக வைத்தியர் பரிசோதனையை தொடர்ந்து கடலில் விடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த ஆமையை பரிசோதனையின் பின் வட மாகாண மிருக வைத்தியர் மருதங்கேணி தாளையடி கடலில்  விடுவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews