யாழ்.பருத்தித்துறை கடலில் 9 மீனவர்கள் கடற்படையினால் கைது..!

யாழ். பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றய தினம் இரவு 4 படகுககளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  9 மீனவர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட வலைகள், மற்றும் 200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மற்றும், 4 படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews