காட்டுயானைகளினால்  வாழ்வாதாரம்  அழிப்பு””

கிளிநொச்சி மாவட்டத்தில்  இராமநாதபுரம் புதுக்காடு அழகாபுரி பகுதியில்  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக  காட்டுயானைகளின்  அட்டகாசம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு   அறுவடைக்குத் தயாராகியுள்ள நிலையில்  நேற்றையதினம் 15.01.2022 இரவு 1.00 மணியளவில்  4 நான்கு  காட்டு யானைகள்    அதிகாலை 4.00மணிவரை 1800 க்கு மேற்பட்ட மரவள்ளிக் பயிர்களை நாசம் பண்ணியுள்ளன.
 வாழ்வாதாரத்திற்காக   பயிரிடப்பட்ட மரவள்ளி வாழை, தென்னைமரம்  என்பனவற்றையும் முற்றாக அழித்து  தமது  வாழ்வாதாரத்தினை  முற்றாக அலித்துள்ளதாகவும் தாம்   தற்பொழுது பொருட்களின்  விலை அதிகரிப்பால் காலை உணவாக பலரது வீடுகளில்  மரவள்ளியே பயன்படுத்துவதாகவும்,  தற்பொழுது  அதுவும்  காட்டு யானைகளினால் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,
தாம்  குநாளாந்த தினக்கூலி  வேலைகளுக்கு சென்று வருவதாகவும்  அதில்  கிடைக்கின்ற வறுமானத்தில்  ஒரு பகுதியினை ஒதுக்கி தாம் தோட்டப்பயிர்கள்  உற்பத்திசெய்துள்ளதாகவும்  ஒரு கிலோ 30ரூபா விற்கு விற்பனைசெய்வதாகவும் அதில் கிடைக்கும் பணத்தினைக்கொண்டு  ஒரு கிலோ அரிசி  160 ரூபாவிற்கும் பெற்று வாழ்ந்துவருவதாகவும்,  கிராமசேவையாளர் மற்றும்   கிளிநொச்சி பிரதேச செயலர் மற்றும்  வனஜீவராசிகள்  தினைக்களம்    என பலருக்கும்  தெரிவித்தும்  எந்தப்பயனும்  கிடைக்கவில்லை  எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வந்து  எமது  கிராமக்களை காப்பாற்றவேண்டும்  என  தெரிவித்துள்ளனர் .

Recommended For You

About the Author: Editor Elukainews