குறுந்தூர வீதி ஓட்ட போட்டி மணற்காடு சந்தியிலிருந்து ஆரம்பமானது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடக்கு இளைஞர்களால்    நாளைய தினம்  வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நடாத்தப்படவுள்ள பாரம்பரிய விளையாட்டு போட்டியின் முதன் நிகழ்வாக இன்றைய தினம் குறுந்தூர வீதி ஓட்ட போட்டி இன்று இடம் பெற்றது.

இன்று பிற்பகல் 5:30 மணியளவில் மணற்காடு சந்தியிலிருந்து ஆரம்பமான குறுந்தூர வீதி ஓட்டப் போட்டி  நாகர்கோவில் கடற்கரைவரை சுமார் 10 km தூரம்  இடம் பெற்றது.இந் நிகழ்வில்  பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் கலந்து கொண்டிருந்தார்

நாளைய தினம் பிற்பகல் உணவு உணணுதல், முட்டி உடைத்தல்,கயிறு இழுத்தல், பணிஸ்  உண்ணுதல், உட்பட பட்ட போட்டியும் இடம் பெறவுள்ளன.
இன்றைய வீதி குறுந்தூர ஓட்டப் போட்டியில் சுமார் முப்பதுபேர்வரை கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது
வடமராட்சி

Recommended For You

About the Author: admin