மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின் கீழ்ப்பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை….!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப்பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன் குளத்தை அண்மித்த  பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் சிறிய அளவில் நாளை திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews