சிறை சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.அவருடைய விஜயத்தில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளும் இணைத்திருந்தனர்.

இதன்போது புதுவருடத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews