கண்திறந்த அய்யப்ப சுவாமி சிலை!! -பக்தர்கள் எடுத்த வீடியோவில் பதிவானதால் பரபரப்பு- |

இந்தியாவின் கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. குறித்த கோவிலின் உள்ளே அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது.

இந்த கோயிலில் 40 ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

அந்த வீடியோவில் கண் திறந்து மூடுவது போல காட்சிகள் பதிவாகி இருந்தன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews