ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி!! -குற்றவாளி செருப்பால் எறிந்ததால் பரபரப்பு- |

குஜராத் மாநிலம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த மாநிலத்தில் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், தனியாக இருந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய அந்த இளைஞர்  சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பின்  இந்த தீர்ப்பைக் கேட்டு கோபமடைந்த குற்றவாளி, தனது செருப்புகளை கழற்றி, நீதிபதியை நோக்கி வீசினார். ஆனால் அந்த செருப்புகள் நீதிபதி மீது விழவில்லை. சாட்சி கூண்டின் அருகே விழுந்தன. இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews